தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வைகாசி திருவிழா இன்று (மே 21) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நம்மாழ்வார் அவதார திருவிழாவான இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் மே 25-ம் தேதி நவதிருப்பதி பெருமாள்களும் ஒரே இடத்தில் எழுந்தருளும் புகழ்பெற்ற 9 கருட சேவை மற்றும் மங்களாசாசனம் நடைபெறவுள்ளது. தினசரி சுவாமி வீதி உலாவுடன், மே 29-ம் தேதி சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.