திருவள்ளூர் மாவட்டத்தில், தாயார் அருகே தூங்கிய குழந்தை, குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில், ஒன்றரை வயது குழந்தை தர்ஷினி வீட்டருகே உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மதிய வேளையில், தாயார் சங்கீதா வீட்டு கதவை திறந்துவைத்துவிட்டு குழந்தையுடன் தூங்கியதாக தெரிகிறது. அப்போது, தவழ்ந்து சென்ற குழந்தை, குளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.