சென்னை ராயபுரத்தில் அரசு மருத்துவமனையின் வாசலில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசவம் முடிந்து வீட்டிற்குச் செல்ல கையில் குழந்தையுடன், தாய் கீதா ஆட்டோ தேடியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், குழந்தையை தன்னிடம் கொடுத்துவிட்டு ஆட்டோ தேடுமாறு கூறியுள்ளார். அதன் பேரில் குழந்தையை தாயார் அப்பெண்ணிடம் கொடுத்த நிலையில், குழந்தையுடன் அப்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.