ராஜஸ்தான் பேட்மிண்டன் வீரரான 21 வயது இளைஞர், அரியானாவைச் சேர்ந்த 16 வயது சிறுமியைத் காதலித்து ஏப்ரல் 20-ல் வீட்டை விட்டு வெளியேறினார். கடத்தல் புகாரின்படி சிறுமியை மீட்ட போலீசார், மே 17-ல் விசாரணைக்கு வந்த இளைஞரைச் சிறுமியின் குடும்பத்தினர் கடத்திச் சென்று கொடூரமாகத் சித்ரவதை செய்துள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, சிறுமியின் தந்தை உட்பட 15 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.