இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று (மே.28) உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உதவிகள் செய்து தியாகத் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புத்தாடை அணிந்து திறந்த வெளி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடத்தினர். பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி கொண்டாடி வருகின்றனர். இறைத் தூதரான நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 12-வது மாதமான துல்ஹஜில் இது கொண்டாடப்படுகிறது.