20 கோடிக்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை உடைய இணையதளங்களை தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.3) நடைபெற்றது. அந்த மனுவில் தளங்களை சிறியவர்களும் எளிதில் அணுகும் வகையில் இருப்பது குறித்து மனுதாரர் கவலை தெரிவித்திருந்தார். மேலும், இவற்றை கட்டுப்படுத்த தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த முக்கியமான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இதுகுறித்து அரசு பதிலளிக்க 4 வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.