மகாவீர் ஜெயந்தியையொட்டி 31ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை

4228பார்த்தது
மகாவீர் ஜெயந்தியையொட்டி 31ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை
புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தியையொட்டி வருமட 31ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 31ஆம் தேதி இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிச வகைகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படுவதுடன், விற்பனையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி