அங்கீகரிக்கப்படாத ஓரல் நிக்கோடின் பவுச்சுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது. இவற்றின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ திறன் நிரூபிக்கப்படாததால், பொதுமக்கள் இதனை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் தண்டனை பாயும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.