அங்கீகாரம் இல்லாத ORS தயாரிப்புகளுக்குத் தடை

18பார்த்தது
அங்கீகாரம் இல்லாத ORS தயாரிப்புகளுக்குத் தடை
உலக சுகாதார நிறுவனம் (WHO) அங்கீகாரம் இல்லாத, தரமற்ற வாய்வழி நீரேற்ற கரைசல் (ORS) தயாரிப்புகளுக்கு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI முழுமையாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல பிராண்டுகள், குளுக்கோஸ் இல்லாத பானங்களை ORS எனக் கூறி போலியாக விற்று வந்ததால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. WHO-வின் படி, ஒரு லிட்டர் சுத்தமான நீரில் 6 ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் உப்பு மட்டுமே கலவையில் இருக்க வேண்டும்; அதிக சர்க்கரை அல்லது பழப் பொடிகளைச் சேர்க்கக் கூடாது.

தொடர்புடைய செய்தி