டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்

29பார்த்தது
டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் டியூட். இந்த படத்தில், தனது இசையமைப்பில் வெளியான 2 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதனை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் ‘பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. படத்தில் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படும்’ என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.