சென்னை: பனி, மழை, குளிர் காலங்களில் வாழைத்தார், வாழைப்பழத்தின் விலை குறைவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வரத்தும் அதிகரித்துள்ளதால், விற்பனை மந்தமாக நடைபெறுகிறது. ஒரு தாருக்கு ரூ.600-க்கு விற்பனையான ரகங்கள் இப்போது ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. முன்பு ரூ.1000-க்கு விற்பனையான செவ்வாழை தாா்கள் இப்போது ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.