ஷான்மசூத் தலைமையிலான
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட்
கிரிக்கெட் போட்டி இன்று (மே.16) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த வங்கதேசம் உள்ளூரில் முதல் தடவையாக அந்த அணிக்கு எதிரான தொடரை வெல்ல முழுமுயற்சி மேற்கொள்ளும்.