வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரெஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) கூட்டணி 300 இடங்களில் 175 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றுள்ளது. மேலும் 30-க்கும் அதிகமான தொகுதிகளில் பிஎன்பி கட்சி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய போட்டியாளராக களத்தில் இருந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி வெறும் 30 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதன் மூலம், தாரிக் ரெஹ்மான் புதிய பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்.