வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு அமைந்ததை தொடர்ந்து, இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முந்தைய இடைக்கால அரசால் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்து, இந்தியாவுடனான நட்புறவை மீட்டெடுக்க இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வணிகம் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக வங்கதேசம் செல்ல காத்திருந்த இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.