சென்னை அடையாறில் உள்ள எஸ்பிஐ வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில், மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது சாஸ்த்ரி நகர் போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனக்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் வங்கியின் லிப்ட் பழுது தொடர்பான தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளது. போலீஸார் அனுப்பிய சம்மனை ஏற்று ஆஜரான கயல்விழியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.