இந்திய ரிசர்வ் வங்கி, மாநிலங்களின் பண்டிகைகளுக்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிச.13 - இரண்டாவது சனிக்கிழமை, டிச.25 - கிறிஸ்துமஸ் தினம், டிச.27 - நான்காவது சனிக்கிழமை மற்றும் டிசம்பர் மாதத்தில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் உள்ளன. இதன் காரணமாக மொத்தம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.