செப். 26 முதல் 5 நாள்கள் வங்கிகள் இயங்காது.. வேலைநிறுத்த அறிவிப்பு

6058பார்த்தது
செப். 26 முதல் 5 நாள்கள் வங்கிகள் இயங்காது.. வேலைநிறுத்த அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (UFBU) செப். 28 முதல் 30 வரை 3 நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது. இதற்கு முந்தைய இரு நாள்களும் (செப். 26, 27) வார விடுமுறை என்பதால், தொடர்ந்து 5 நாள்கள் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பணப் பரிவர்த்தனை மற்றும் காசோலை பணிகள் பாதிக்கப்படலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி