அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) நாளை (ஜன.27) நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை மற்றும் எல்.ஐ.சி-யில் 100% அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தால் பண பரிவர்த்தனை மற்றும் காசோலை பரிமாற்றம் போன்ற பணிகள் முடங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வங்கி ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.