விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற விளம்பர பேனரால் சர்ச்சை

3791பார்த்தது
விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற விளம்பர பேனரால் சர்ச்சை
நெல்லை மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படுவதாக விளம்பர பேனர் வைக்கப்பட்டது. அதில் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சர்ச்சைக்குரிய பேனரை உடனடியாக அகற்றினர். ஓட்டல் உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி