ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் பகுதியில் 'பாஷ்யம்' நிறுவனம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள் தரமின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குடியிருப்புகளின் தூண்கள், பாத்ரூம் கதவுகள் ஆகியவை தொட்டவுடனேயே உடைந்து விழுவதாக குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வீடுகள் தற்போது உதிர தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 'பாஷ்யம்' என்ற நிறுவனத்தின் பெயரை நம்பி வீடுகளை வாங்கியதாகவும், தற்போது அந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.