சூதாட்டம் மற்றும் முறைகேடுகளை தடுக்க நடப்பு
ஐபிஎல் தொடரில் ஸ்மார்ட் சன்கிளாஸ் பயன்படுத்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது. இணையம், ஆடியோ, வீடியோ வசதிகள் கொண்ட இந்த கண்ணாடிகள் மூலம் ரகசியங்கள் கசிவதைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கடுமையான அபராதமும், ஒழுங்கு நடவடிக்கையும் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.