ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது. இதற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 5 அணிகள் பங்கேற்கும் நடப்பாண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி பிப்.,14ஆம் தேதி தொடங்குகிறது. தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 15ஆம் தேதி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.