SIR குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள யாருக்கும் ஓட்டுப்போடும் உரிமை இல்லை நிலை வந்தாலும் வரலாம். இந்திய அரசியல் சாசனம் நமக்கு கொடுத்துள்ள உரிமைகளில் முக்கியமானது வாக்குரிமை. SIR மூலம் லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம். வாக்கு செலுத்துவது என்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது வாழ்க்கை. GEN Z உள்ளிட்ட புதிய வாக்காளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.