ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பிரசவம்: ஆட்டோவிலேயே பிறந்த குழந்தை

3329பார்த்தது
ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பிரசவம்: ஆட்டோவிலேயே பிறந்த குழந்தை
சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள பழவேற்காட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கீர்த்தி என்பவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றனர். அன்னை சிவகாமி நகர் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோதே வழியிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தாயும் சேயும் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்தி