6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன் ரூ.10 ஆயிரம் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் கொரோனா காலம் முதல் தற்போதைய ஆட்சி காலம் வரை தொடர்ந்து யாசகம் செய்து, சுமார் ரூ.1.60 கோடிக்கும் மேல் பொது நலனுக்காக அவர் வழங்கியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள இந்த அளப்பரிய அக்கறையும், தன்னலமற்ற சேவையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
நன்றி:OneIndia
நன்றி:OneIndia
