சிவகார்திகேயன் தயாரித்த ‘வாழ்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி, தனது திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவருக்கும் பூஜா என்பவருக்கும் கடந்த 2024ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், குழந்தையை நல்ல சூழலில் வளர்க்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், “என்றென்றும் அனாதையாக இருப்பதே என் சாபம்” என குறிப்பிட்டுள்ளார்.