கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்த வெற்றிலை, உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி செரிமானத்தை தூண்டுவதுடன் நரம்பு மண்டலத்தையும் மூளையின் ஞாபக சக்தியையும் பலப்படுத்துகிறது. பல் ஈறு கோளாறுகள், வாய் துர்நாற்றம் மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வெற்றிலை, புற்றுநோயிலிருந்து உடலை பாதுகாத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் இதனை மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.