ராம் சரண்-புச்சி பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'பெத்தி' படத்தின் முதல் பாடல் 'சிகிரி சிகிரி' வெளியாகி ஒரே நாளில் மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. மோஹித் சவுகான் பாடிய இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி திரைக்கு வர உள்ளது.