இந்திய விவசாயிகளுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு தளமான 'பாரத் விஸ்தார்', மத்திய வேளாண் துறை அமைச்சகத்தால் பிப்.17 அன்று தொடங்கப்பட்டது. இந்த தளம் வானிலை முன்னறிவிப்பு, சந்தை நிலவரம், பூச்சி மேலாண்மை மற்றும் மண் பரிசோதனை முடிவுகள் போன்ற முக்கியமான தகவல்களை விவசாயிகளின் சொந்த மொழியிலேயே வழங்குகிறது. குறிப்பாக, விவசாயிகள் 155261 என்ற பிரத்யேக எண்ணிற்கு அழைப்பதன் மூலம் 'பாரதி' என்ற ஏஐ உதவியாளரிடம் தேவையான சந்தேகங்களை கேட்டு தீர்வு பெற முடியும்.