இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவலை குடும்பத்தினர் மறுத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மகன் மனோஜ் மறைவுக்கு பிறகு பாரதிராஜா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறார்.