ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 50-க்கும் அதிகமான ரன்களை வாரி வழங்கி ஏமாற்றமளித்தார். இதன் மூலம்
ஐபிஎல் வரலாற்றில் 9 ஆட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்து, முகமது ஷமியின் மோசமான சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்த அன்வாண்டட் சாதனப் பட்டியலில் முகமது சிராஜ் (8 முறை) அடுத்த இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.