'பிக்பாஸ் - 9' சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளர்களான கம்ரூதின் மற்றும் விஜே பார்வதி இருவரும், அடிக்கடி தாங்கள் அணிந்திருக்கும் மைக்கை 'ஆஃப்' செய்து ரகசியமாக பேசுவது கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், இன்று (டிச.13) வெளியான புரமோவில், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி, அவர்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்து, மைக்கை கழற்றி வைத்துவிட்டு பேசும்படி கோபமாக கண்டித்துள்ளார்.