பீகார் மாநிலத்தில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்க நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் 124 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸை பொறுத்தவரை 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில், 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.