பிகாரில் கடந்த 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதையடுத்து இன்று (நவ.14) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை முதல் முன்னிலையில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை 179 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி இதுவரை 31 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.