பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி சுயேச்சை எம்.பி.யான பப்பு யாதவை, 1995-ம் ஆண்டு தொடரப்பட்ட குற்றவழக்கு தொடர்பாக போலீசார் நேற்று (பிப்.6) நள்ளிரவில் கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஒத்துழைக்காததால், அவரது இல்லத்திற்கே சென்ற போலீசார் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.