தமிழ் பாட்டு பாடி அசத்திய பீகார் எம்எல்ஏ.. வைரல் வீடியோ

30பார்த்தது
பீகார் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ள 25 வயதான நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர், தமிழில் “கண்ணான கண்ணே” பாடல் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அலி நகரில் பாஜக வேட்பாளராக போட்டிப்போட்ட பாடகி மைதிலி, வெற்றிப் பெற்றுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களின் 2வது பட்டியலை பாஜக வெளியிட்டபோது, அதில் பலரது கவனத்தை ஈர்த்தவர் பாடகி மைதிலி. கிராமப்புற பாடல்கள் பாடி, மக்களிடம் நெருக்கமான தொடர்பு உள்ளதால் அவர் வெற்றிப் பெற்றதாக கூறப்படுகிறது. 

நன்றி: PT

தொடர்புடைய செய்தி