பிகார் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.06) 121 தொகுதிகளில் தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகி உள்ளன. மிக உயர்ந்த வாக்கு கோபால்கஞ்சில் 46.73% என குறிப்பிடப்பட்டுள்ளது.