நடிகர் ஷர்வானந்த் நடித்துள்ள 'பைக்கர்' படத்தின் முதல் பாடலான 'ப்ரெட்டி பேபி'யின் புரோமோ நாளை (நவ.11) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபிலாஷ் ரெட்டி கங்காரா இயக்கியுள்ள ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படமான இது பந்தயத்தில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு பைக்கரின் கதை. மாளவிகா நாயர், ராஜசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம், வரும் டிச.6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.