தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை பெயர்ப்பலகையில் நடந்த குளறுபடிக்கு காரணமான இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மும்மொழிப் பலகை அகற்றப்பட்டு புதிய இருமொழிப் பலகை பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கையே அரசின் உயிர் கொள்கை என கூரிய அவர், கொள்கைக்கு மாறாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடரும் என்றும், மும்மொழிக் கொள்கையை எந்த வடிவத்தில் வந்தாலும் அரசு முறியடிக்கும் என்றும் தனது X தளத்தில் உறுதியளித்துள்ளார்.