அரசியல் சாசன மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று (நவ., 20) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மசோதாக்களை ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் விளக்கமளித்துள்ளது.