சபரிமலை சென்று திரும்பும் பக்தர்கள் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையை அணுக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால், கேரளா - தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜைக்காக சபரிமலை சென்று வரும் நிலையில், அறிகுறிகள் இருந்தால் மருத்துவ உதவியை நாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.