கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 13 ஆயிரம் கோழி, வாத்து, காடை உள்ளிட்ட பறவைகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கேரளா–தமிழக எல்லைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள 1,200 கோழிப்பண்ணைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.