கேரளாவின் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் கோழிகள், வாத்துகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தன. எச்-1, என்-1 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. தென்காசி, கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கோழி, வாத்து, முட்டை, தீவனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.