கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் போன்ற இடங்களில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழி எச்சம் மற்றும் தீவனங்கள் நீலகிரிக்கு கொண்டு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.