தமிழகத்தில் பறவை காய்ச்சல் அச்சம் நிலவுவதால், சிக்கன் மற்றும் முட்டையை நன்கு வேகவைத்து உண்ணுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று (பிப்.10) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆப்-பாயில்' சாப்
பிடுவதை தவிர்க்கவும், மர்மமான முறையில் இறந்த கோழிகளை உண்ண வேண்டாம் எனவும் எச்சரித்தார். மேலும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கூறியுள்ளார்.