மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சமோசா வாங்குவதற்காக லோகோ பைலட் ஒருவர் மின்சார ரயிலை பாதியில் நிறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனதை அடுத்து, பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விதிமீறல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.