திமுக என்னும் கோட்டை இருக்கும் வரை தமிழ்நாட்டுக்குள் பாஜகவினால் நுழைய முடியாது என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். விருதுநகரில் இன்று (பிப்., 07) நடைபெற்று வரும் இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், 'இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக சிதைத்து வருகிறது. திமுக என்ற இயக்கத்தால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறோம். மாநில உரிமைகளை திமுக பாதுகாத்து வருகிறது' என்று தெரிவித்தார்.