தேர்தல் கமிஷனை எதிர்த்து கருத்து தெரிவித்ததாக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக தமிழக பாஜக முறையிட்டுள்ளது. தஞ்சையில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் SIR-ஐ விமர்சித்த அவரது உரை, தேர்தல் கமிஷன் மீது அவதூறாகவும், பொதுமக்களை தூண்டுவதாகவும் இருந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆ.ராசாவின் எம்பி பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தரப்பு தேர்தல் கமிஷனிடம் கோரியுள்ளது.