சென்னையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (பிப்.9) நடைபெற்றது. 6 தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகியதாலும், எச்.ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலும் இக்கூட்டத்தில் இருவரும் பங்கேற்கவில்லை. அண்ணாமலையின் திடீர் விலகல் பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.