கடலூர் நெல்லிக்குப்பம் அருகே தோட்டப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சரசு (80) என்பவர் வீட்டில் புகுந்த வாலிபர், அவரது தங்கச் செயின், வளையல், தோடு ஆகியவற்றை பறித்துச் சென்றார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்,
பாஜக நிர்வாகியும், சிமென்ட் கடை நடத்தி வருபவருமான அருண்மொழித்தேவனை (35) கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிராம் மூக்குத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வழிப்பறி சம்பவங்களில் இவருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.